பெண் மருத்துவர் உத்தரவுப்படி துப்பாக்கி முனையில் தொழிலதிபரை கடத்தினோம்: சிறை காவலர், 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் கைது

சென்னை: சவுடு மண் ஒப்பந்தம் பெற்று தருவதாக ரூ.4.50 கோடி பணம் பெற்று ஏமாற்றி வந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். சென்னை தி.நகர் ராமசாமி தெருவை சேர்ந்தவர் சரவணன்(41). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, தொழிலதிபர் சரவணனை துப்பாக்கி முனையில் கடத்திவிட்டனர். வீட்டில் இருந்த, சொகுசு கார், நகைகள், பணத்தையும் அள்ளி சென்று விட்டதாக அவரது சகோதரர் முத்துகுமரன் தகவல் தெரிவித்தார். இந்த தகவல், உடனே மாம்பலம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கூடுதல் கமிஷனர் பிரேம் ஆன்ந்த் சின்ஹா உத்தரவுப்படி தொழிலதிபரை மீட்க  தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சிசிடிவு பதிவுகள் மற்றும் சொகுசு கார்களின் பதிவு எண்களை வைத்து தீவிர ஆய்வு செய்தனர். அப்போது, தொழிலதிபரை கடத்தி சென்ற நபர்களின் கார்கள், ஓஎம்ஆர் சாலை வழியாகச் செல்வது தெரியவந்தது.  உடனே, அந்தந்த போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஓஎம்ஆர் சாலையில் சென்ற 2 கார்களும், மாமல்லபுரம் அருகே தொழிலதிபர் சரவணன் கடத்தப்பட்ட காரையும் மடக்கி பிடித்தனர். அதாவது, புகார் ெகாடுத்த 2 மணிநேரத்தில் தொழிலதிபரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.பின்னர் தொழிலதிபர் சரவணனை கடத்தியதாக மயிலாடுதுறையை சேர்ந்த சவுடு மணல் ஒப்பந்ததாரர் ஆரோக்கியராஜ்(41), அவரது கார் ஓட்டுனர் அரவக்குறிச்சியை சேர்ந்த அரவிந்த்(23), சென்னை பெருங்குடியில் வசிக்கும் பி.டெக் மாணவன் அப்ரோஸ்(23), மதுரை கல்லூரியில் படிக்கும் மாணவன் அஜய்(24), விஜயபாண்டி(25) மற்றும் கோவை மத்திய சிறையில் பணியாற்றும் சிறை காவலர் நாகேந்திரன் (31) ஆகிய 6 பேரை மாம்பலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 சொகுசு கார்கள், பணம், தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த வழக்கில் தொழிலதிபர் சரவணனை கடத்த திட்டம் தீட்டி கொடுத்தது ஒரு பெண் மருத்துவர் என்ற அதிர்ச்சி தகவலை கடத்தல்காரர்கள் தெரிவித்தனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் தோல் மருத்துவமனை நடத்தி வரும் பெண் மருத்துவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் ஆரோக்கியராஜ் உட்பட 6 பேர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:ெதாழிலதிபர் சரவணனும் மணல் ஒப்பந்ததாரர் ஆரோக்கியராஜ், நண்பர்கள். சரவணன் நட்புவட்டத்தில் பொதுப்பணி மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் பலர் உள்ளனர். இதனால், ஆரோக்கிய ராஜூக்கு மதுரை, தேனி மாவட்டங்களில் சவுடு மண் எடுக்கும் ஒப்பந்தம் வாங்கித் தருவதாக கூறினார். இதற்காக, அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு தர வேண்டும் என்று கூறி ரூ.4.50 கோடி பணம் வாங்கினார். ஆனால் சொன்னப்படி சரவணன் எந்த ஒப்பந்தமும் பெற்று தரவில்லை. இதனால் சரவணனுக்கும் ஆரோக்கியராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கொடுத்த பணத்தையும் தரவில்லை.இதற்கிடையே சரவணன் மூலம் அறிமுகமான கிழக்கு கடற்கரை சாலையில் தோல் மருத்துவமனை நடத்தி வரும் பெண் மருத்துவரை ஆரோக்கியராஜ் இரண்டு நாட்களுக்கு முன்பு சந்தித்து நடந்த சம்பவத்தை சொன்னார். சரவணனுக்கு அந்த பெண் மருத்துவர் இரவு நேர நடன கிளப் மூலம் அறிமுகமானவர். இதனால் சரவணன் அந்த பெண் மருத்துவருடன் அடிக்கடி ‘டேட்டிங்’ செல்வார். இந்நிலையில், அந்த பெண் மருத்துவருக்கு சரவணன் பாலியல் தொந்தரவு கொடுத்தும், பணம் கேட்டும் தொந்தரவு செய்துள்ளார். இதனால் சரவணனுக்கும் பெண் மருத்துவருக்கும் பகை உருவானது. இதனால் சரவணனை பழிவாங்க காத்திருந்தார். அப்போது தான் ஆரோக்கியராஜ் பெண் மருத்துவரிடம் தனக்கு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார்.பிறகு பெண் மருத்துவர் தொழிலதிபர் சரவணன், ஒரு மோசடி பேர்வழி, பணம் மற்றும் அழகு பெண் என்றால் எங்கு அழைத்தாலும் வந்து விடுவான். நான் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பங்களாவில் இருக்கிறேன் என்றும், நான் அழைத்து வர சொன்னதாக சரவணனிடம் சொல்லுங்கள், அவன் வருவான். அப்புறம் சரவணன் சகோதரன் முத்துக்குமரனை தொடர்பு கொண்டு நாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கொடுத்தால் தான் விடுவிப்போம் என்று மிரட்டி பணத்தை வாங்கி கொள்ளுங்கள் என்று யோசனை கொடுத்துள்ளார். பெண் மருத்துவரின் யோசனைப்படி ஒப்பந்ததாரர் ஆரோக்கியராஜ் தனது குழுக்களுடன் நேற்று முன்தினம் சரவணன் வீட்டிற்கு சென்ற பெண் மருத்துவர் அழைத்து வர சொன்னதாக கூறியுள்ளார். ஆனால் பெண் மருத்துவர் எனக்கு போன் செய்யாமல் ஏன் உன்னிடம் கூறி என்னை அழைத்து வர சொன்னார். நான் வரமாட்டேன் என்று கூறி போலீசுக்கு தகவல் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது வேறு வழியின்றி ஆரோக்கியராஜ் கத்திமுனையில் தொழிலதிபர் சரவணனை கடத்தியுள்ளார். அதோடு சரவணனின் 3 கார்கள், வீட்டில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், பணத்தையும் அள்ளி கொண்டு சென்றுள்ளனர். ஆனால் போலீசார் புகார் அளித்த சிறிது நேரத்தில் செல்போன் சிக்னல் மற்றும் கார்கள் பதிவு எண்களை வைத்து எங்களை பிடித்துவிட்டனர். ஆரோக்கியராஜ் நான் சரவணனிடம் கொடுத்த பணத்தை எப்படி வாங்குவது என்று தான் பெண் மருத்துவரிடம் யோசனை கேட்டேன். ஆனால் அவர், சரவணனை பழிவங்கும் நோக்குடன் என்னை பயன்படுத்தி,அவரை கடத்த சொல்லி என்னை போலீசாரிடம் சிக்க வைத்துவிட்டார் இவ்வாறு கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் ஆரோக்கியராஜ் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்….

The post பெண் மருத்துவர் உத்தரவுப்படி துப்பாக்கி முனையில் தொழிலதிபரை கடத்தினோம்: சிறை காவலர், 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: