புதுக்கோட்டையில் வாக்குச்சாவடி சீரமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம்

 

புதுக்கோட்டை, மார்ச் 13: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்குச்சாவடி சீரமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையாக கொண்டு, கிராமபுறம் மற்றும் நகர்புறம் 1500 வாக்காளர்களுக்கு அதிகம் உள்ள வாக்குச்சாவடி மையங்களை துணை வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்துதல், பழுதான வாக்குச்சாவடி மையங்களை இடமாற்றம் செய்யவும், குடியிருப்பு பகுதியிலிருந்து 2 கிலோ மீட்டருக்கு அதிகமாக உள்ள வாக்குச்சாவடி மையங்களை அருகில் இடமாற்றம் செய்வது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையாக கொண்டு, கிராமபுறம் மற்றும் நகர்புறம் 1500 வாக்காளர்களுக்கு அதிகம் உள்ள வாக்குச்சாவடி மையங்களை துணை வாக்குச்சாவடி மையங்கள் 1, பழுதடைந்த கட்டிடங்கள் மாற்றுதல் 29, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வாக்குச்சாவடி மையம் மாற்றுதல் 6 மற்றும் வாக்குச்சாவடி மையத்தின் பெயர் மாற்றுதல் 6 ஆக மொத்தம் 41 வாக்குச்சாவடி மையங்களுக்கான முன்மொழிவுகளை சென்னை தலைமை தேர்தல் அதிகாரி அவர்களுக்கு அனுப்புவதற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்பட்டது.

The post புதுக்கோட்டையில் வாக்குச்சாவடி சீரமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: