புதுக்கோட்டை: புதுக்கோட்டை வடக்கும், தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் திமுக இளைஞர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கான பட்டியலை இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அமைப்பாளராக க.சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக மு.கலைஞர் கருணாநிதி, இளஞ்சேரன் முத்துச்சாமி, ப.சிவா, நூ.அன்சாரி பாஷித், கந்தர்வக்கோட்டை ஸ்டாலின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அமைப்பாளராக த.மணிராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக இரா.தமிழரசு, க.கவிக்குமார், நா.நசுருதீன், அ.முகமது ரபீக், பி.எல்.இளையராஜா, சே.அருண்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
The post புதுகை வடக்கு, தெற்கு மாவட்ட திமுக இளைஞர்அணி அமைப்பாளர்கள் நியமனம் appeared first on Dinakaran.