பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

காரைக்குடி, மே 10: காரைக்குடி முத்துபட்டணம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் பரமேஸ்வரி வரவேற்றார். நகராட்சி சேர்மன் முத்துத்துரை தலைமை வகித்து, மாணவிகளை பாராட்டி பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்வி வளர்ச்சிக்கு என பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். முதல்வரின் அறிவிப்புகளால் அரசு பள்ளியை நோக்கி வருவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இப்பள்ளியில் மாணவிகள் பாத்திமா 574, வகிதா பேகம் 544 மற்றும் சப்ரின்பானு 539 மதிப்பெண் பெற்றுள்ளது பாராட்டக்கூடியது.

தவிர 145 மாணவிகள் தேர்வு எழுதி அனைவரும் வெற்றி பெற்று 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியை பொறுத்தவரை கடந்த முறை நாம் நகராட்சி தலைவராக இருந்த போது மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, புதிய கட்டிடம் கட்டப்பட்டது. தற்போது கூடுதல் வகுப்பறை மற்றும் வசதிகள் தேவை என கோரிக்கை விடுத்துள்ளனர். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் உறுதுணையுடன் சம்மந்தப்பட்ட துறை அமைச்சரை சந்தித்து பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள் கண்ணன், ராதாபாண்டியராஜன், வட்ட செயலாளர் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளி உதவி தலைமையாசிரியர் மைவிழி நன்றி கூறினார்.

The post பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: