பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு: 9,392 மாணவ, மாணவிகள் தமிழ் பாட தேர்வெழுதினர்

 

கரூர், மார்ச் 2: கரூர் மாவட்டத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு தமிழ் பாடத்தில் 9,392 மாணவ, மாணவிகள் எழுதினர் என்று கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் தேர்வுத் துறையால் நடத்தப்படும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வு நேற்று (1ம் தேதி) துவங்கியது. தொடர்ந்து 22ம் தேதி வரை இந்த பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. பொதுத் தேர்வானது 43 தேர்வு மையங்களில் 104 மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறுகிறது.

முதல் நாளான நேற்று (1ம் தேதி) தமிழ் பாடத்தை 9,392 மாணவ, மாணவிகள, பிரென்ஞ் பாடத்தை22 மாணவ,மாணவிகளும் மற்றும் அரபிக் பாடத்தை132 மாணவிகளும் என மொத்தம் 9,546 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினார். இந்நிலையில் கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் தங்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் பிளஸ்2 அரசு பொதுத் தேர்வு தமிழ் பாடத்தை 9,392 மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள் என்றார். ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

The post பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு: 9,392 மாணவ, மாணவிகள் தமிழ் பாட தேர்வெழுதினர் appeared first on Dinakaran.

Related Stories: