பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்: வேளாண்மை, உழவர் நலத்துறை அறிவிப்பு

சென்னை: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள் என வேளாண்மை, உழவர் நலத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர்  வெளியிட்ட அறிக்கை: 2022-2023ம் ஆண்டில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இதுவரை சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிரை காப்பீடு செய்யாத பயிர்க்கடன் பெற்ற விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், பயிர்க்கடன் பெறாத இதர விவசாயிகள்  பொது சேவை மையங்களிலும் உரிய ஆவணங்களுடன் 15ம் தேதிக்குள் (நாளை) காப்பீடு செய்ய வேண்டும்.  இதுவரை 15.95 லட்சம் ஏக்கர் பரப்பளவு சுமார் 11 லட்சம் விவசாயிகளால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவம் தொடங்கி மழை பெய்து வரும் நிலையில்  தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் , மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, ராமநாதபுரம், திருச்சி, அரியலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூர், திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிருக்கான காப்பீட்டை   உரிய ஆவணங்களுடன் நாளைக்குள் இத்திட்டத்தில் பதிவு செய்து பயனடையுமாறு வேளாண்மை – உழவர் நலத்துறை கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி நாள்: வேளாண்மை, உழவர் நலத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: