புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டத் தொடர் ஜனவரி 29ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இத்தொடர் பிப்ரவரி 15ல் முடிந்தது, 2ம் கட்ட தொடர் கடந்த 8ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, கடந்த 19ம் தேதி கொரோனா அறிகுறிகள் காரணமாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களவை சபாநாயகர் பிர்லாவுக்கு கொரோனா
