பாகிஸ்தானை தீவிரவாத மையமாக உலக நாடுகள் பார்க்கிறது: அமைச்சர் ஜெய்சங்கர் கடும் தாக்கு

ஐக்கிய நாடுகள் :உலக நாடுகள் பாகிஸ்தானை தீவிரவாத மையமாக பார்க்கிறது,’’ என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடுமையாக சாடியுள்ளார்.  நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்த மாதம் இந்தியா தலைமை தாங்குகிறது. இதில் ‘சர்வதேச தீவிரவாத ஒழிப்பு அணுகுமுறை: சவால்கள் மற்றும் முன்னோக்கிய வழிகள்’ என்ற தலைப்பில் நேற்று முன்தினம் விவாதம் நடந்தது. இதற்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்த உலகம் பாகிஸ்தானை தீவிரவாத மையமாக பார்க்கிறது. பாகிஸ்தான் இனியாவது திருத்தி கொண்டு ஒரு நல்ல அண்டை நாடாக இருக்க முயற்சிக்க வேண்டும். தீவிரவாதம் எங்கிருந்து பரவுகிறது என உலக நாடுகள் அறியும் என்பதை தீவிரவாதத்தை தூண்டுபவர்கள் மறந்து விட வேண்டாம்,’’ என்று கூறினார்.அப்போது பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர், “இன்னும் எத்தனை காலம் தான்  ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இருந்துதான் தீவிரவாதம் உருவாகிறது என்று இந்தியா பார்க்கப் போகிறது?’’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெய்சங்கர், “இந்த கேள்வியை தவறான அமைச்சரிடம் கேட்டுள்ளீர்கள். இதனை பாகிஸ்தான் அமைச்சரிடம் கேட்டிருக்க வேண்டும். பாகிஸ்தான் அமைச்சர்கள் தான் தீவிரவாதத்தை இன்னும் எவ்வளவு காலம் ஆதரிக்க போகிறார்கள் என்பதற்கு பதில் அளிக்க வேண்டும்,’’ என்று தெரிவித்தார். வரும் 2023ம் ஆண்டை `சர்வதேச தானியங்கள் ஆண்டாக’ ஐநா கடைபிடிக்க உள்ள நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பின், பொது செயலாளர் அன்டோனியோ கட்டரெஸ், பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் முழுவதும் தானியங்களை கொண்டு சமைத்த மதிய உணவு விருந்து அளித்தார்….

The post பாகிஸ்தானை தீவிரவாத மையமாக உலக நாடுகள் பார்க்கிறது: அமைச்சர் ஜெய்சங்கர் கடும் தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: