பள்ளி வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்போன் கொண்டுவந்தால் பறிமுதல்; அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை

திருச்சி: வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்போன் எடுத்து வர அனுமதி கிடையாது. மீறினால், செல்போன் பறிமுதல் செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி: பள்ளி வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்போன் எடுத்து வர அனுமதி கிடையாது. மீறினால், மாணவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படும் செல்போன் திரும்ப வழங்கப்படமாட்டாது. 2 ஆண்டாக ஆன்லைன் வகுப்பில் படித்தது மாணவர்களை பாதித்துள்ளது. அதை சரி செய்வதற்காக அவர்களது மனதுக்கும், மூளைக்கும் புத்துணர்வு, உற்சாகம் வழங்கிய பிறகு தான் வகுப்புகள் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் ஐந்து நாட்கள் என்ஜிஓக்கள், போலீசார் வகுப்பு எடுப்பர். தனியார் பள்ளிகள், புத்தகம், சீருடைகளை பள்ளிகளிலேயே வாங்க வேண்டும் என மாணவர்களை வற்புறுத்தக்கூடாது. 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு விரைவில் ஊசி போடப்படும். தனியார் பள்ளியிலிருந்து அரசு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு டிசி வழங்காமல் இருக்கக்கூடாது. அதே நேரத்தில் அரசு பள்ளிகளில் டிசி கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது. இரவு 12.30 மணி வரை காத்திருந்து அரசு பள்ளியில் சேர்க்கும் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. வரும் மாணவர்களை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் பள்ளியின் உள்கட்டமைப்பு தரம் உயர்த்தப்படும். 9,494 ஆசிரியர்களை இந்த ஆண்டு எடுக்க டிஆர்பி மூலம் அட்டவணை வெளியிட்டுள்ளோம். பள்ளிகள் செயல்பட துவங்கியதால் படிப்படியாக இல்லம் தேடி கல்வித் திட்டம் நிறுத்தப்படும். நீட் ரத்து தொடர்பாக  முதல்வர் எடுத்துள்ள சட்டப்போராட்டம் வெற்றி  பெறும். கண்டிப்பாக நீட் ரத்தாகும் என எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.  இவ்வாறு அவர் கூறினார்….

The post பள்ளி வகுப்பறைக்குள் மாணவர்கள் செல்போன் கொண்டுவந்தால் பறிமுதல்; அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: