சென்னை: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் சீனிவாசபுரம் முதல் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முரளிதரன். இவரது மனைவி ஜெயபாரதி (56). இவர் நேற்று முன்தினம் இரவு கடைக்கு போய்விட்டு திரும்பி கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், வழிமறித்து அவரது கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துவிட்டு தப்பிவிட்டார். இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடுகின்றனர்.
தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் 6 சவரன் செயின் பறிப்பு
