சென்னை: சென்னை, பள்ளிக்கரணை சதுப்புநில சுற்றுச்சூழல் பூங்காவில் நேற்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பொதுமக்களுக்கான வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை மண்டல வனப் பாதுகாவலர் கீதாஞ்சலி, சென்னை மாவட்ட வன அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் வனச் சரகர் சரவண விவேக் ஆகியோர் பூங்கா மேம்பாட்டு பணிகள் குறித்து தெரிவித்தனர். பின்னர் அமைச்சர் ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மத்திய அரசின் நபார்டு நிதி உதவியுடன் ரூ.281 கோடி மதிப்பில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பறவைகளுக்கான வாழ்விட ஆதாரங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டு, முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பெற்று பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்….
The post பள்ளிக்கரணை பூங்காவில் ரூ.281 கோடியில் மேம்பாட்டுத் திட்டம்: அமைச்சர் ராமச்சந்திரன் தகவல் appeared first on Dinakaran.