பயோமெட்ரிக் முறையில் விரல்ரேகை தெளிவின்றி இருந்தாலும் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும்: உணவுத்துறை சுற்றறிக்கை

சென்னை: பயோமெட்ரிக் முறையில் விரல்ரேகை தெளிவாக விழாவிட்டாலும் ஆவணங்களை சரிபார்த்து ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் உணவுப்பொருட்களை பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதியோர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் இதர அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளுக்கு வரும் போது கனிவுடன் ரேஷன் அட்டையை ஸ்கேன் செய்து விரல் ரேகையை சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.விரல் ரேகை சரியாக உள்ள அட்டைதாரர்களுக்கு உடனடியாக பொருட்கள் வழங்க வேண்டும் எனவும், தெளிவின்மையால் விரல்ரேகை, பயோமெட்ரிக்கில் விழாமல் போனாலும் ரேஷன் பொருட்களை விநியோகிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பதில் அங்கீகரிக்கப்பட்ட நபர் வந்தால், உடனடியாக பொருட்களை விநியோகம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பகோளாறால் அரை மணி நேரத்திற்கு மேல் ஆதார் இணைப்பு பெற முடியாத சூழலில் பிற வழிமுறைகளை கடைப்பிடித்து பொருட்களை விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ரேஷன் கடைகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு உணவுத்துறை ஆணையர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்….

The post பயோமெட்ரிக் முறையில் விரல்ரேகை தெளிவின்றி இருந்தாலும் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும்: உணவுத்துறை சுற்றறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: