இலங்கையில் மழைக்கு 21 பேர் பலி

கொழும்பு : இலங்கையில் கனமழைக்கு 21 பேர் பலியாகி உள்ளனர். இலங்கையில் கடந்த 16ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மலைப்பகுதிகளில் மண்சரிவு அபாயம் உள்ளதால், அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மழை மற்றும் இடி மின்னல் காரணமாக. 21 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. சுமார் ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 45,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் கடந்த ஆண்டு கன மழைக்கு சுமார் நூறு பேர் இறந்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: