போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி அருகில் உள்ள ஜம்புகுடப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜா. இவர் தென்பெண்ணையாற்று கரையோரமுள்ள டொக்கம்பட்டி கிராமத்தில், 2 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசம்பட்டி பகுதியில் உள்ள தனியார் விதை விற்பனை கடையில், பீர்க்கன் விதைகளை வாங்கி சென்று பயிரிட்டார். பயிரிட்டது முதல் செடிகள் வளர்ச்சியடையாமல் மஞ்சள் நிறத்தில் காணப்பட்டது. இதுகுறித்து ராஜா சம்பந்தப்பட்ட விதை விற்பனை நிறுவனத்தில் முறையிட்டார். இதையடுத்து, விவசாய நிலத்திற்கு வந்த விதை நிறுவன அதிகாரிகள், சில மருத்துகளை தெளிக்குமாறு பரிந்துரை செய்தனர். கடந்த 2 மாதமாக 10 முறைக்கு மேல் ராஜா மருந்துகளை தெளித்து வந்தார்.
தரமற்ற விதைகளால் இயல்பு தன்மை மாறி விளைந்த பீர்க்கன்காய்: விவசாயி புகார்
