×

நேதாஜியை கவுரவிக்க குடியரசு கொண்டாட்டம் 23ம் தேதியே தொடக்கம்

*24 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதிபுதுடெல்லி : பிரதமர் மோடி தலைமையிலான பாஜ அரசு இந்திய வரலாற்று நிகழ்வுகள், கலாசாரத்தை பறைசாற்றும் முக்கிய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது. அதன்படி, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாள் ஆண்டுதோறும், ‘பராக்கிரம் திவாஸ்’ என்ற பெயரில் ஏற்கனவே கொண்டாடப்பட்டு வருகிறது.  தற்போது, அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அவரது பிறந்த நாள் நூற்றாண்டை முன்னிட்டு, குடியரசு தின விழா கொண்டாட்டம் ஜனவரி 24க்கு பதில் 23ம் தேதியில் இருந்தே ஆண்டுதோறும் தொடங்கப்பட உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது  இந்நிலையில், டெல்லியில் வரும் 26ம் தேதி நடக்கும் குடியரசு தின விழா ராணுவ அணிவகுப்பை பார்வையிட, 24 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை போல் இந்தாண்டும் வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. 24 ஆயிரம் பார்வையாளர்களில் 19 ஆயிரம் பேருக்கு ஏற்கனவே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களுக்கு பொதுமக்கள் டிக்கெட் வாங்கி கொண்டு அணிவகுப்பை பார்வையிடலாம்.  கொரோனா வழிகாட்டு விதிமுறைகளின்படியே அணிவகுப்பு பேரணி நடக்கும் என்பதால் பார்வையாளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது….

The post நேதாஜியை கவுரவிக்க குடியரசு கொண்டாட்டம் 23ம் தேதியே தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Republic ,Netaji ,New Delhi ,BJP government ,Modi ,
× RELATED நோயாளிகளின் உறவினர்கள்...