நீட் விலக்கு சட்டம் கவர்னர் உடனே ஒப்புதல் தரவேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் ஒன்றிய அரசின் நிலைக்கு எதிரான தமிழ்நாட்டின் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த வரலாறு உண்டு. அதேபோல், இந்த விஷயத்திலும் நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும்.  இந்தியா முழுவதுமே நீட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும். குறைந்தபட்சம் தமிழ்நாடு நீட் விலக்கு கோரியுள்ள நிலையில் அதற்கு உடனடி ஒப்புதல் தர வேண்டும். தமிழ்நாட்டில், ஆளுனரால் திருப்பி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டம் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுனருக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதற்கு எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டியது அரசியலமைப்புச் சட்டக் கடமையாகும். அதை மதித்து நீட் விலக்கு சட்டத்திற்கு, ஒரு நாள் கூட தாமதிக்காமல், உடனடியாக ஆளுனர் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post நீட் விலக்கு சட்டம் கவர்னர் உடனே ஒப்புதல் தரவேண்டும்: ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: