நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவன் சாதனை

வாழப்பாடி, ஜூன் 18: பெத்தநாயக்கன்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் தங்கமணி, நீட் தேர்வில் 404 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். இம்மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தனபால், பொருளாளர் நடராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் வரதன் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் ராம்குமார் நன்றி கூறினார். விழாவில் மாணவன் தங்கமணியை பாராட்டி கல்விக்காக ₹10 ஆயிரத்தை தொழிற்கல்வி ஆசிரியை சாந்தி வழங்கினார்.

The post நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவன் சாதனை appeared first on Dinakaran.

Related Stories: