நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் அரசு டவுன் பஸ்கள் இயக்கம்

நாமக்கல், ஜூன்20: நாமக்கல் மாநகராட்சி பழைய பஸ் நிலையத்தில், நீட்டிக்கப்பட்ட புதிய வழித்தடங்களில் அரசு டவுன் பஸ் வசதி துவக்க விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், எம்எல்ஏ ராமலிங்கம், மேயர் கலாநிதி முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., நீட்டிக்கப்பட்ட புதிய வழித்தடங்களில் 2 அரசு டவுன் பஸ் வசதியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். நாமக்கல் – வள்ளிபுரம் செல்லும் தடம் எண்: எம்- 1 அரசு டவுன் பஸ்சை ஆண்டிப்பட்டி புதூர், புள்ளாக்குமரன் பாளையம், ஆண்டிப்பட்டி பிரிவு, கீரம்பூர் வழியாக, கீரம்பூர் பிரிவு வரையிலும், நாமக்கலில் இருந்து கருப்பட்டி பாளையம், பெரியூர் வழியாக தும்மங்குறிச்சி வரையிலும், நாமக்கல்- மோகனூர் செல்லும் தடம் எண்: பி-12 டவுன் பஸ்சை பெரமாண்டம்பாளையம் வழியாகவும் நீட்டிக்கப்பட்ட, அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படும். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் பூபதி, திமுக நகர செயலாளர் சிவகுமார், ராணாஆனந்த், கொமதேக நிர்வாகிகள் ரவிச்சந்திரன், மணி, மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் செங்கோட்டுவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நீட்டிக்கப்பட்ட வழித்தடங்களில் அரசு டவுன் பஸ்கள் இயக்கம் appeared first on Dinakaran.

Related Stories: