×

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கும் 22 அதிருப்தி எம்பிக்களை தகுதி நீக்கக்கோரி வழக்கு: பிரதமர் இம்ரான் கான் அரசு அதிரடி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது வரும், 28ம் தேதி வாக்கெடுப்பு நடக்கிறது. இம்ரானின்  கட்சியை சேர்ந்த எம்பி.க்களே அவருக்கு  எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 22 எம்.பி.க்கள் பிரதமர் இம்ரான் கான் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். மொத்தம் உள்ள 342 எம்பி.க்களில், 172 பேரின் ஆதரவு தேவை. இதில் அதிருப்தி அடைந்துள்ள 22 எம்பிக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தால் இம்ரான் கான் அரசு கவிழ்ந்துவிடும் ஆபத்து உள்ளது. அரசை காப்பாற்ற பிரதமர் இம்ரான் கான் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்காக, எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்பி.க்களை அரசியல் சட்ட விதிகளின்படி தகுதி நீக்கம் செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் பாக். அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இது பற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல் மற்றும் நீதிபதி முனிப் அக்தர் அடங்கிய அமர்வு விசாரிக்க உள்ளது….

The post நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்கும் 22 அதிருப்தி எம்பிக்களை தகுதி நீக்கக்கோரி வழக்கு: பிரதமர் இம்ரான் கான் அரசு அதிரடி appeared first on Dinakaran.

Tags : Imran Khan ,Islamabad ,Pakistan ,Parliament ,Dinakaran ,
× RELATED பண மோசடி, வெறுப்பு பேச்சு வழக்கு;...