நன்னிலம் அருகே கொள்முதல் நிலையத்தில் 300 நெல் மூட்டைகளை சேதப்படுத்திய மர்மநபர்கள்-போலீஸ் விசாரணை

நன்னிலம் : நன்னிலம் அருகே மகாராஜபுரத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் 300 நெல் மூட்டைகளை கிழித்து சேதப்படுத்தியதாக புகாரின்பேரில் பேரளம் போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள மகாராஜபுரத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்தில் சுமார் 4500 க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை விவசாயிகளிடம் வாங்கி அடுக்கி வைத்து அதன்மேல் தார்பாய்கள் போர்த்தி பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மர்மநபர்கள் 300 நெல் மூட்டைகளை கிழித்தும், தார்ப்பாயை சேதப்படுத்தியும் அலுவலகங்களில் உள்ள நெல் சுத்தம் செய்யும் லோயர் மிஷின் எடை மேடை உள்ளிட்ட உபகரணங்களை சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து இங்கு பணியாற்றும் பட்டியல் எழுத்தர் சக்திவேல் பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்….

The post நன்னிலம் அருகே கொள்முதல் நிலையத்தில் 300 நெல் மூட்டைகளை சேதப்படுத்திய மர்மநபர்கள்-போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: