மதுரை அருகே குழந்தை கடத்தல் பீதியில் பதற்றம்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீது தாக்குதல்

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே கையில் பிஸ்கெட் பாக்கெட் வைத்து சுற்றி திரிந்த பெண்ணை குழந்தை கடத்த வந்தவர் என பிடித்து கட்டி வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 18-ம் குடி கிராமத்தில் இரண்டு பெண்கள் பிஸ்கெட் பாக்கெட்களுடன் சென்று அவற்றை குழந்தைகளுக்கு கொடுத்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அதில் ஒரு பெண்ணை மட்டும் பிடித்து கட்டி வைத்துள்ளனர். அவரிடம் பலமுறை விசாரித்தும் பதில் கூறவில்லை. அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் அங்கு சென்ற போலீசார் அந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலூர் சுற்று வட்டாரத்தில் தொடர்ந்து வாட்ஸ்ப் குழுக்களில் குழந்தை கடத்தல் வதந்தி பரவி வருகிறது. இதனால் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிபவர்களை கூட பொதுமக்கள் தாக்கி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: