நடப்பாண்டிற்கான சுற்றுலா தொழில் முனைவோர் விருது

 

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், இயங்கி வரும் சுற்றுலா தொழில் முனைவோர்கள் இந்த ஆண்டுக்கான சுற்றுலா தொழில் முனைவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுலா தொழில் முனைவோருக்கு ஆண்டுதோறும் சுற்றுலா விருதுகள் வழங்கப்படுகின்றன.

இவ்விருதுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து சுற்றுலா தொழில் முனைவோரும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் படிவத்தை www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்விருதுகள் உலக சுற்றுலா தினமான செப்டம்பர் 27ம் தேதி சென்னையில் வழங்கப்படுகிறது. இதற்கு உரிய ஆவணங்களுடன் சுற்றுலா தொழில் முனைவோர் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post நடப்பாண்டிற்கான சுற்றுலா தொழில் முனைவோர் விருது appeared first on Dinakaran.

Related Stories: