தொழில்நுட்ப துறையில் அதிகரித்து வரும் பணி நீக்கம்: டிவிட்டர், மெட்டா நிறுவனங்களை தொடர்ந்து 10,000 பேரை பணிநீக்கம் செய்யஅமேசான் நிறுவனம் திட்டம்

டிவிட்டர், மெட்டா நிறுவனங்களை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் 10,000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளளதாக தக்காளி வெளியாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் கடத்த ஓராண்டாகவே கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. பணவீக்கம், மற்றும் சந்தையில் நிலவும் மந்தநிலையாழ் அந்நிறுவனத்தின் மூலதன மதிப்பில் ரூ.81 லட்சம் கோடி சரிந்துள்ளது. இதனால் செலவுகளை குறைக்கும் விதமாக மிகவிரைவில் 10,000 பணிநீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிநீக்கம் இந்த வாரத்தில் இருந்து தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. அமேசான் நிறுவனத்தின் alexa braava jet, வீட்டு பாதுகாப்பு கேமராக்கள், சில்லறை வணிகம், மனித வள பிரிவுகளில் பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கை எடுத்துள்ளன. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11,000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக தெரிவித்தது. டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பின்னர் அங்கும் பணிநீக்கம் மேற்கொள்ளப்பட்டது. தொலில்நுட்ப துறையில் அலை, அலையாய் பணிநீக்கம் அதிகரித்து வருவது அத்துறை சார்ந்த ஊழியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. …

The post தொழில்நுட்ப துறையில் அதிகரித்து வரும் பணி நீக்கம்: டிவிட்டர், மெட்டா நிறுவனங்களை தொடர்ந்து 10,000 பேரை பணிநீக்கம் செய்யஅமேசான் நிறுவனம் திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: