தொடர் மழையால் திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின

திருவாரூர்: தொடர் மழையால் திருவாரூர் மாவட்டத்தில் 50,000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. தொடர் மழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் 25,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம், மயிலாடுதுறை, கொள்ளிடம் பகுதிகளில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. நாகை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக சுமார் 20,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. பாலையூர், வடகுடி, தெத்தி, செல்லூர், திருமருகல், திருக்குவளை, கீழ்வேளூர் உள்ளிட்ட இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கின. தொடர் மழையால் வேதாரண்யத்தில் 5,000 ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூர் பகுதியில் 300 ஏக்கர் வெள்ளரி செடிகள் மழைநீரில் மூழ்கின. மழைநீரில் மூழ்கி வெள்ளரி செடிகள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்….

The post தொடர் மழையால் திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பல ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின appeared first on Dinakaran.

Related Stories: