தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 18.21 கோடியாக உயர்வு..! உயிரிழப்பு எண்ணிக்கை 39.45 லட்சத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 16.63 கோடியாக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18.21 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 182,183,793 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 166,739,303 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3,945,184 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 11,499,306 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 80,383 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

The post தொடர்ந்து அச்சுறுத்தும் கொரோனா: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 18.21 கோடியாக உயர்வு..! உயிரிழப்பு எண்ணிக்கை 39.45 லட்சத்தை தாண்டியது appeared first on Dinakaran.

Related Stories: