தேனி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

 

தேனி, ஜன. 30: தேனி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கான சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. தேனி அருகே அரண்மனைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட முல்லைநகரில் உள்ள தேனி ஊராட்சி ஒன்றிய தற்காலிக அலுவலக கூட்ட அரங்கில், தேனி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கான சாதாரணக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய சேர்மன் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். துணை சேர்மன் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், கனி முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், 24 தீர்மானங்கள் விவாதத்திற்கு வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

மேலும், கூட்டத்தில் பேசிய கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்து பேசிய சேர்மன் சக்கரவர்த்தி, ‘‘ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து வார்டுகளுக்கும் தேவையான வளர்ச்சி பணிகள் பாரபட்சமின்றி முறையாக செய்துள்ளோம். இன்னமும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட வேண்டியுள்ளது. ஊராட்சி ஒன்றியத்திற்கென ஒதுக்கப்படும் நிதியை கொண்டு அடிப்படை பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இனி வரும் காலத்தில் அனைத்து வார்டு கவுன்சிலர்களின் கோரிக்கைகள் தொடர்பாக பரிசீலனை நடத்தி முழுமையாக பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

The post தேனி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: