சென்னை: தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, சௌகார் ஜானகி, நடிகர் ராமராஜன் உள்ளிட்டோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நகைசுவை நடிகர் யோகிபாபு, நடிகை சங்கீதா ஆகியோருக்கும் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.