தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு

வத்திராயிருப்பு, ஏப். 17:தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் பணிபுரிந்து பேரிடர் காலங்களில் பொதுமக்களின் உயிர்களை பாதுகாக்கும் பணியில் தங்கள் உயிரை இழந்த வீரர்களுக்கு நீத்தார் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி சமீபத்தில் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு வத்திராயிருப்பு தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலர் பாலநாகராஜ் தலைமையில் தீயணைப்பு படையினர் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில் தீயணைப்புத்துறையினர் தீ விபத்தை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.

பொதுமக்களிடம் அவர்கள் கூறியதாவது: வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கூடுமானவரை எளிதில் தீப்பிடிக்கக்கூடிய கீற்று கூரைகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும். ஒரு குடிசைக்கும் மற்றொரு குடிசைக்கும் இடைவௌி இருப்பது நல்லது. கூரை வீடுகளில் சமையல் செய்யும் இடத்தில் சுற்றுப்புறம் மற்றும் மேற்புறத்திலும் தீப்பிடிக்காத ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் அல்லது தகரம் போன்ற பொருட்களினால் தடுப்பு அமைக்க வேண்டும். சமையல் காஸ் பயன்படுத்தும்போது, மிக கவனமாக இருக்க வேண்டியவது அவசியம் என்றனர்.

The post தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: