திருவில்லிபுத்தூர் அருகே தடுப்பணையை தாண்டி துள்ளி குதித்த மீன்கள்: போட்டி போட்டு அள்ளிச்சென்ற மக்கள்

 

திருவில்லிபுத்தூர், டிச.1: திருவில்லிபுத்தூர் அருகே தடுப்பணையை தாண்டி ஏராளமான மீன்கள் துள்ளி குதித்து வெளியே வருகின்றன. வெளியே வரும் மீன்களை பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அள்ளிச் செல்கின்றனர்.திருவில்லிபுத்தூர் அத்திகுளம் செல்லும் சாலையில் சிறிய அளவிலான கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் சிறிய தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக கண்மாய் நிறைந்து தடுப்பணை வழியாக தண்ணீர் மறுகால் பாய்ந்து வருகிறது.

அவ்வாறு மறுகால் பாயும் தண்ணீரில் இருந்து ஏராளமான மீன்கள் தாவி குதித்து வெளியே வருகின்றன. குறிப்பாக அயிரை, கெண்டை, கெளுத்தி, சிறிய அளவிலான விரால் மீன்கள் போன்றவை வெளியே வருகின்றன. இதனை பார்த்த அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று தடுப்பணையை முற்றுகையிட்டு தாவி குதித்து வெளியேறும் மீன்களை பிடித்து சென்றனர். சிலர் துண்டுகளில் பிடித்து தங்களது வீட்டுக்கு அதிக அளவு மீன்களை கொண்டு சென்றனர்.

The post திருவில்லிபுத்தூர் அருகே தடுப்பணையை தாண்டி துள்ளி குதித்த மீன்கள்: போட்டி போட்டு அள்ளிச்சென்ற மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: