திருநள்ளாறு காமராஜர் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா

காரைக்கால், செப். 23: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த செருமாவிலங்கையில் பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகளை, சிவா எம்எல்ஏ நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: கல்லூரி விரைவில் மேம்படுத்தும் பணிகள் விரைவில் துவங்கும். புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். மாணவ, மாணவிகள் நான்கு ஆண்டுகள் சிறப்பாக படித்து நல்ல பணிக்கு செல்ல வேண்டும். இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் மாணவர்கள் அதிக ஆர்வமுடன் உள்ளனர்.

புதுவை பொறியியல் கல்லூரிக்கு இணையாக இக்கல்லூரி திகழ வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஆராமுதன், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.தற்போது 180 இடங்களுக்கு 125 மாணவ மாணவிகள் 17 வது சேர்க்கை பிரிவில் சேர்ந்துள்ளனர். வரும் நாட்களில் மேலும் மாணவர்கள் சேருவார்கள் என்றும், வரும் திங்கள்கிழமை முதல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் எனவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post திருநள்ளாறு காமராஜர் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: