திமுக ஒன்றிய செயலாளர்கள் வழங்கினர் கட்டிமேடு அரசுப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம்

 

திருத்துறைப்பூண்டி, ஜூலை 21: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக் குழு தலைவி தேன்மொழி தலைமை விகித்தார். பொறுப்பு தலைமை ஆசிரியர் முகுந்தன் வரவேற்றார். 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாமல், தேர்விற்கு வருகை புரியாத மற்றும் துணை தேர்விற்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் விரும்பும் வேலை வாய்ப்புகள் குறித்த படிப்புகளை அரசின் தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர்ந்து படிக்க வழிகாட்டுதல், பள்ளி செல்லா இடை நின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் உடைய குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பணியில் உறுப்பினர்கள் அனைவரும் தங்களை இணைத்துக் கொள்ளுதல், உறுப்பினர் வாயிலாக தையல் இயந்திரம் பெறப்பட்டு மாணவிகளுக்கு தையல் பயிற்சி அளித்தல் உட்பட பல தீர்மானங்கள் ஆலோசிக்கப்பட்டன. முடிவில் ஆசிரிய பிரதிநிதி சந்திரசேகரன் நன்றி கூறினார். கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post திமுக ஒன்றிய செயலாளர்கள் வழங்கினர் கட்டிமேடு அரசுப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: