பெட்ரோல். டீசல் விலை உயர்வு நிறுத்தி வைப்பு : கர்நாடக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஒரு வாரமாக விலையில் மாற்றம் இல்லை

டெல்லி : கர்நாடகாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக பெட்ரோல். டீசல் விலை உயர்த்தப்படவில்லை. கச்சா எண்ணெய் விலை 2014ம் ஆண்டை போலவே இருந்த போதும், பெட்ரோல். டீசல் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு வரியை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அந்த யோசனையை மத்திய அரசு நிராகரித்து விட்டது. இந்த நிலையில் கடந்த 24ம் தேதிக்கு பிறகு பெட்ரோல். டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைக்க வில்லை.

தினம் தோறும் சில காசுகள் மதிப்பிலாவது விலை மாற்றம் இருக்கும் நிலையில்,  தற்போது ஒரு வாரமாக விலை உயர்த்தப்பட வில்லை. கர்நாடகாவில் தேர்தல் நெருங்கும் நிலையில் விலை உயர்வு இல்லை எனக் கூறப்படும் நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்கள் மறுத்துவிட்டன. கர்நாடக தேர்தல் நடைபெற உள்ள  நிலையில், விலை உயர்த்த வேண்டாம் என மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், கடந்த மாதம் 24ம் தேதிக்கு பிறகு விலை மாறவில்லை. 24ம் தேதி ஒரு  லிட்டர் டீசல் சென்னையில் ரூ69.37ஆகவும், டெல்லியில் ரூ65.75ஆகவும் இருந்தது. 24ம் தேதி டெல்லியில் ரூ65.93ஆகவும், சென்னையில் ரூ69.56ஆகவும்  உயர்ந்தது. இன்று  வரை இந்த விலை மாறவில்லை. இதுபோல் பெட்ரோல் விலை 24ம் தேதி டெல்லியில் ரூ74.50ஆகவும், சென்னையில் ரூ77.29ஆகவும்  இருந்தது.

மறுநாள் டெல்லியில் ரூ74.63ஆகவும், சென்னையில் ரூ77.43ஆகவும் உயர்ந்தது. அதன்பிறகு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.கர்நாடக  மாநிலத்தில் பொதுத்தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும்போதும் இதை கருத்தில்  கொண்டுதான் விலை உயர்வு நிறுத்திவைக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என  எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளன

Related Stories: