தாமரை தலைவரின் செயலால் டெக்ஸ்டைல் மாவட்டத்தில் தாமரை இரண்டாக உடைந்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சம்பளத்தை விட கிம்பளம் அதிகமாக வசூலிக்கும் அதிகாரியை அசைக்க முடியலையாமே, அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை எப்போதுமே பிசியான சாலையாம். இந்த சாலை செல்லும் சில பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளை கவர அரசு இடத்தை பலர் ஆக்கிரமித்து கடைகள் வைச்சிருக்காங்களாம். இந்த கடைகளை நடத்துவதற்கு யாரும் அனுமதி வழங்கலையாம். ஆனால் ‘தூங்கா நகரின்’ பெயரில் முடியும் ஊர் ஒன்று இருக்கிறதாம். பிசியான சாலையில் உள்ள அந்த ஊரில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் பலரும் கடைகள் வைத்துள்ளனர். இவர்களுக்குள் நடந்த வியாபார போட்டியில் ஒருவர், நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு புகார் அனுப்பி இருக்கிறார். இதை எப்படியோ மோப்பம் பிடித்த ஆக்கிரமிப்பாளர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு, இலைக்கட்சி காலம் முதல் அதிகார பலத்தில் இருக்கிற ‘ஒரு அதிகாரியை’ சந்தித்தாங்க. மாதா மாதம் கடைகளில் மாமூல் வசூல் செய்து தந்துவிடுவது என்று பேசி முடிவெடுக்கப்பட்டதாம்.  அத்தோடு ஒரு சிறு தொகையுடன், தண்ணீர் பாட்டில், இளநீர், பிஸ்கெட் இப்படி உதவியாளர் மூலம் இந்த ரோட்டோர கடைகளில் தொடர் வசூல் செய்து வரும் ‘‘அதிகாரிக்கு’’ இப்போது சம்பளத்தை விட கிம்பளம் அதிகமாக வருதாம். உயிருக்கு உலை வைக்கும் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் கரன்சி சம்பாதிப்பது எந்த விதத்தில் நியாயம்னு, அந்த அதிகாரிக்கு கீழ் வேலை பார்க்கும் ஊழியர்களே கேள்வி கேட்கும் நிலைதான் உள்ளதாம். அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘ஒரு கட்சியையே இரண்டாக உடைக்கும் தந்திரம் தெரிந்த தேசிய கட்சியின் மாநில தலைவரை பற்றி ெசால்லுங்க கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் இலைகட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ‘தில்’லானவர் தனது ஆதரவாளர்களுடன் சமீபத்தில் தாமரையில் ஐக்கியமானார். கட்சியில் இணைந்த நாள் முதல் அவருக்கு எந்தவிதமான பொறுப்பும் வழங்கப்படாமல் இருந்து வந்தது. சில தினங்களுக்கு முன்பு திடீரென டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்திற்கு மாவட்ட தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆனால், தாமரையில் கட்சியில் மாவட்டத் தலைவராக இரண்டு முறை இருந்தவர்.. மண்டல பொறுப்பிலும் ஆ‘சாமி’யானவர் இருந்து வந்தார். அவரிடம் இருந்து மாவட்ட தலைவர் பதவியை பறித்து புதியதாக வந்த ‘தில்’லானவருக்கு வழங்கப்பட்டதால் ஆ‘சாமி’யானவர் கடும் அப்செட்டில் உள்ளாராம். இவரது ஆதரவாளர்களும் தாமரை மீது அதிருப்தியில் இருக்காங்களாம். இது, இப்போது மாவட்டத்தில் கட்சி 2 ஆக உடையும் நிலைக்கு கொண்டு வந்துள்ளதாம். ஒரே நியமனம் மூலம் கட்சியை 2 ஆக உடைத்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்று எதிர்முகாமில் உள்ள தாமரையின் அடிபொடிகள் பேசிக்கிறாங்க. உதாரணமாக தாமரையின் மாநில தலைவர் கரூருக்கு வருகை தந்தபோது புதிய மாவட்ட தலைவர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டதாம். கட்சி 2 ஆக உடைந்ததால், இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் பதவியில் இருந்து தூக்கப்பட்டவரும், அவரது ஆதரவாளர்களும் மாநில தலைவரை வரவேற்க வரவில்லையாம். மாஜி மாவட்ட தலைவரும், புதிய மாவட்ட தலைவரும் நெருக்கம் காட்டாமல் இருந்து வருகின்றனர். இப்படியே போனால் டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் தாமரை மலராது என்று அடித்து சொல்கின்றனர் அடிபொடிகள்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘எந்த மாவட்டத்துல சங்கத்து பெயரை சொல்லி டூயூட்டி பாக்குறதில்லையாம்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மண்டலம் பஸ் டிப்பார்ட்மென்ட்ல வெயிலூரு, மிஸ்டர் பத்தூரு, குயின்பேட்டைன்னு 3 மாவட்டங்கள் இருக்குது. இந்த மாவட்டங்கள்ல இருந்து 700க்கும் மேற்பட்ட பஸ்களை மாவட்டம், மாநிலங்களுக்கு இடையே இயக்கி வர்றாங்க. இதுல, இருக்குற பணியாளருங்கள்ல கொஞ்சம் பேரு, சங்கத்து பெயரை சொல்லிகிட்டு சரியா டூயூட்டிக்கே வர்றதில்லையாம். அதையும் மீறி கேட்டா கொடி புடிக்குறாங்களாம். இப்படி இருக்குற பணியாளருங்க எல்லாருமே சங்கத்து பெயரை சொல்லிகிட்டு திரிஞ்சா, யார் டூயூட்டி பார்க்குறது தெரியலையேன்னு புலம்பல் சத்தம் பஸ் டிப்பார்ட்மெண்டுல இருந்தே ஒலிக்கத்தொடங்கியிருக்குது…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாணவி தற்கொலை வழக்கில் ஆவணங்களை மறைத்த பள்ளி நிர்வாகிகளை பார்த்து அதிர்ந்த கல்வி துறை அதிகாரிகளின் நிலையை பற்றி சொல்லுங்க…’’என்றார் பீட்டர் மாமா. ‘‘ கோவையில் தனியார் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொந்தரவு காரணமாக, 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. இதற்காக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் விசாரணை நடத்த குழு தலைவராக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதமானவரை நியமிச்சாங்க. இவர், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிக்கு 3 முறை நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளார்.அப்போது, குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, போக்சோவில் கைதாகியுள்ள பள்ளி ஆசிரியர் மற்றும் முதல்வர் பற்றிய விவரங்களை, பள்ளியின் நிர்வாக அலுவலகத்தில் கேட்டுள்ளார். ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் கொடுக்க மறுத்துவிட்டனர். மேலும், வேண்டும் என்றால் நீங்கள் ஜெயிலுக்கு போங்க, அங்கே நீங்க கேட்ட ஆவணம் எல்லாம் கிடைக்கும் என்று மிரளும் வகையில் பேசியிருக்காங்க. அதன் பிறகு சட்டம் தன் கடமையை செய்யும் என்று கீதமானவர் சொன்ன பிறகு, எல்லா டாக்குமென்ட்டுகளும் மேடம் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மேஜை, பீரோ டிராயர் சாவி என எல்லாம் அவரிடம்தான் உள்ளது. அவரை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டார்கள். அவர், விடுதலையாகி வந்தால்தான் எல்லாவற்றையும் எடுக்கமுடியும் சொன்னாங்களாம். பிறகு விசாரணைக்கு பள்ி ஒத்துழைப்பு அளிக்கவில்லை என ஆய்வறிக்கையில் குறிப்பிட்டு, பள்ளி லைசென்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பேன் என பதிலுக்கு மிரட்டிவிட்டு வந்துவிட்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா. …

The post தாமரை தலைவரின் செயலால் டெக்ஸ்டைல் மாவட்டத்தில் தாமரை இரண்டாக உடைந்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Related Stories: