தர்மபுரி நுகர்பொருள் வாணிபக்கிடங்கு அருகில் வீட்டிற்குள் படையெடுக்கும் வண்டுகள்: தூக்கத்தை இழந்து தவிக்கும் மக்கள்

தர்மபுரி: தர்மபுரி பாரதிபுரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் இருந்து சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடுகளுக்குள் வண்டுகள் படையெடுப்பதால், தூக்கத்தை இழந்து மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.தர்மபுரி இலக்கியம்பட்டி ஊராட்சி பாரதிபுரத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கிடங்கில்,  30ஆயிரம் டன் அரிசி சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவு தானியங்களிருந்து வெளியேறும் வண்டுகள் குடியிருப்பு பகுதிக்கு படையெடுக்கின்றன. கே.கே.நகர், காமராஜர்நகர், முல்லைநகர், கே.பி.கே.நகர், விஸ்வநாதன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீட்டிற்குள் வண்டுகள் வருகின்றன. இதனால் சாப்பிட முடியாமலும், இரவு நேரங்களில் தூங்க முடியாமல், சிறுவர், சிறுமிகளின் காதில் வண்டுகள் புகுந்து கொள்வதால் மக்கள் கடும் சிரமப்படுகின்றனர்.வண்டுகளின் தொல்லையால் வாடகை வீட்டில் இருந்த சிலர் வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடங்களுக்கு சென்று விட்டனர். சொந்தவீட்டுக்காரர்கள் சிலர் வீட்டை விற்க முடிவு செய்துள்ளனர். வண்டுகளின் தொல்லையால், வீடுகளை காலி செய்யும் நிலை இப்பகுதியில் உள்ளது. இதேபோல், பாரதிபுரம் இபி காலனி, குமரபூரிகாலனி, டிஎம்எஸ் காலனியிலும் வண்டு தொல்லைகள் அதிகமாக உள்ளன. இதுகுறித்து வாணிபக்கிடங்கு அதிகாரிகளிடம் குடியுருப்பு பகுதிமக்கள் தெரிவத்தாலும் கண்டுகொல்லுவதில்லை என புகார் எழுந்துள்ளது. எனவே விரைவில் கலெக்டர் அலுவலகத்தில் வண்டு விடும் போராட்டம் நடத்தவும், நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குடியிருப்பு பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது: தர்மபுரி பாரதிபுரத்தில் உள்ள மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் பராமரிக்கப்பட்டு வரும் உணவு தானியங்களில் இருந்து வண்டுகள், சிறிய பூச்சிகள் உருவாகி அருகே உள்ள குடியிருப்புகளுக்கு பரவி வருகின்றன. மே, ஜூன், ஜூலை மாதங்களில் அதிக வண்டுகள் வெளியேறுகின்றன. இந்த வண்டுகள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு பறந்து வந்து குழந்தைகளின் மூக்கு, காதில் புகுந்துவிடுகின்றன. இரவு நேரத்தில் அதிக தொந்தரவால் கைக்குழந்தைகள் தூங்குவதற்கு பதில் பகலில் தூங்குகின்றன. மேலும் சமைப்பதற்காக வாங்கி வைத்துள்ள உணவு ெபாருட்களிலும் வண்டுகள் செல்வதால் பொருட்கள் சேதமடைகிறது. உணவில் வண்டுகள் விழுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்த கொரோனா காலக்கட்டத்தில் வண்டுகளால் மனஉளைச்சல் அடைந்துள்ளோம். எனவே குடோனை இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால் முறையாக பராமரிக்க வேண்டும்.இவ்வாறு கூறினர்….

The post தர்மபுரி நுகர்பொருள் வாணிபக்கிடங்கு அருகில் வீட்டிற்குள் படையெடுக்கும் வண்டுகள்: தூக்கத்தை இழந்து தவிக்கும் மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: