பேஸ்புக் தகவல் திருட்டு விவகாரம் : அமெரிக்க நாடாளுமன்றம் முன் மார்க் ஜூக்கர்பெர்க் நாளை ஆஜர்

நியூயார்க்: தகவல் திருட்டு விவகாரம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கிடம் அமெரிக்க செனட் சபை விசாரணை மேற்கொண்டது. 2016 அமெரிக்க அதிபர் தேர்தலின் போது டொனால் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்திற்கு கேம்பிரிட்ஸ் அனாலிடிகா நிறுவனம் சேவை செய்தது. இந்த நிறுவனத்துக்காக பேஸ்புக் சமூக வலைதளத்தில் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருப்பட்டதாக புகார் எழுந்தது.

இதனை ஒப்புக்கொண்ட பேஸ்புக் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கூறினார். இந்நிலையில் தகவல் திருட்டு தொடர்பாக ஜீக்கர்பெக்கிடம் அமெரிக்க செனட் சபை நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியுள்ளது. அமெரிக்க செனட் சபையிடம் மார்க் ஜூக்கர்பெர்க் விளக்கமளித்துள்ள நிலையில் நாளை அவர் அமெரிக்க பிரதிநிதிகள் சபை முன்பும் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க இருக்கிறார். 

Related Stories: