தமிழகத்தில் 47 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு ஏதும் இல்லை

சென்னை: தமிழகத்தில் 29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லாத நிலையில் நேற்று 47 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்று மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசு எடுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அதிகரிக்க தொடங்கி, 5ம் தேதி 58 பேருக்கும், 6ம் தேதி 64 பேருக்கும், 7ம் தேதி 89 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்தவகையில் நேற்று முன்தினத்தை விட பாதியாக குறைந்து நேற்று 47 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் தொடர்ந்து கொரோனாவுக்கு உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 16,881 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 47 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டுத் தனிமை மற்றும் மருத்துவமனையில் 478 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று சிகிச்சை பெற்று வந்த 68 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 34,15,850 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு 38,025 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், நேற்று அதிகபட்சமாக சென்னையில் 23 பேர், செங்கல்பட்டில் 10 பேர், கோவையில் 5 பேருக்கும், திருச்சியில் 3 பேர், சேலத்தில் 2 பேர், கடலூர், காஞ்சிபுரம், நாமக்கல், திருவள்ளூரில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மற்ற 29 மாவட்டங்களில் பாதிப்பு ஏதும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post தமிழகத்தில் 47 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு ஏதும் இல்லை appeared first on Dinakaran.

Related Stories: