×

தனியார் பேருந்து புறப்படும் நேரத்தில் அரசு பேருந்து புறப்பட்டதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம்

 

செங்கல்பட்டு: தனியார் பேருந்து புறப்படும் நேரத்தில் அரசு பேருந்து புறப்பட்டதால், ஓட்டுர்கள், டிரைவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளான தாம்பரம், காஞ்சிபுரம், திருத்தனி, வேலூர், மாமல்லபுரம், கல்பாக்கம், திருப்போரூர், உத்திரமேரூர், மதுராந்தகம் என பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பேருந்து நிலையத்தில் இருந்து ஒவ்வொரு பேருந்தும் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படுவதற்கு என ஒரு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தந்த நேரப்படிதான் பேருந்துகள் புறப்பட வேண்டும். இந்நிலையில், நேற்று காலை திருப்போரூர் செல்லவேண்டிய அரசு பேருந்து 9.10க்கு புறப்பட வேண்டும். ஆனால், அந்த நேரம் முடிந்து 9.20க்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயார்நிலையில் இருந்தது. அப்போது, அந்த அரசு பேருந்தை தனியார் பேருந்து ஓட்டுநர் மடக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தனியார் பேருந்து ஓட்டுநர் கூறும்போது, ‘எங்களது பேருந்திற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தில் அரசு பேருந்தில் பயணிகளை ஏற்றுகின்றனர். அவரவர் பேருந்திற்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு செல்லாமல் எங்களது பேருந்து புறப்படும் நேரத்தில் பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதுபோன்று அடிக்கடி அரசு பேருந்து ஓட்டுநர்கள் நடந்து கொள்வதாக தனியார் பேருந்து ஓட்டுனர்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், தனியார் பேருந்து நடத்துனர் அரசு பேருந்து முன்னே செல்லக்கூடாது என்று பேருந்துக்கு முன்னே வழி விடாமல் சென்றது.

The post தனியார் பேருந்து புறப்படும் நேரத்தில் அரசு பேருந்து புறப்பட்டதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Dinakaran ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்