×

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மாணவரணி பொறுப்புகளுக்கான ஆய்வு கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட பகுதி நகர, ஒன்றிய, பேரூர், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொறுப்புகளுக்கான நேர்காணல் நேற்று ஆலந்தூர் பட்ரோட்டில். உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். ஆலந்தூர் பகுதி திமுக செயலாளர்கள் பி.குணாளன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவரணி அமைப்பாளர் பேராசிரியர் எல்.பிரபு வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் தா.மோ அன்பரசன் மாநில மாணவரணி இணை செயலாளர் ஜெரால்டு, மாநில துணை செயலாளர் சேலம் தமிழரசன் ஆகியோர் மாணவரணியில் சேர உள்ள மாணவ, மாணவர்களிடம் நேர்காணல் நடத்தினார். பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: 75 ஆண்டுகள் ஒன்றுபட்டு நிற்கும் இந்தியாவிலேயே ஒரே கட்சி திமுக அதேபோல் திமுக அரசின் திட்டங்கள் இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டங்கள் ஏழை எளியவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் திட்டங்கள் மேலும், ரூ.21லட்சம் பள்ளிகுழந்தைளுக்கு காலை உணவு, படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கி படிக்கும் ஆர்வத்தை ஊட்டியவர் முதல்வர், கலைஞரைப் போலவே புதிய திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியவர் நமது முதல்வர் 2026ல் தேர்தலுக்கான கூட்டப்பட்டது.

இந்த கூட்டம் வரும் 2026 தேர்தலில் பணியாற்றுவதற்கான நமது கட்சி மீது பற்றும் விசுவாசம் உள்ளவர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆய்வு கூட்டம் தயார்படுத்துவதற்கான கூட்டம் திட்டமிட்டு வேலை செய்து 2026 நாம் மீண்டும் வெற்றி பெற வேண்டும். கட்சிக்கு கட்டுக்கோப்போடு வேகமாக வேலை பார்க்க வேண்டும். மேலும், வரும் 28ம் தேதி காஞ்சிபுரத்தில் முதல்வர் தலைமையில் நடக்கும் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்கும். பவள விழா பொதுக்கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.இந்த கூட்டத்தில் பரங்கிமலை கிழக்கு ஒன்றியஒன்றிய செயலாளர் ஜி.கே ரவி, தலைமை செயற்குழு உறுப்பினர் சதீஷ்,,மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் கலாநிதி குணாளன், விக்னேஷ்வரன், டி.ஜெகன். வே.சந்கீதா எம்.ஜெகதீப உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

The post காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட மாணவரணி பொறுப்புகளுக்கான ஆய்வு கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram North District ,Minister ,D. Mo. Anparasan ,Kanchipuram ,Alandur Padrot ,DMK ,Mo. Anparasan ,North District ,Mo. ,Anparasan ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரத்தில் நாளை திமுக பவள விழா...