×

சாலை தடுப்பில் பைக் மோதி மனைவி கண் முன் கணவர் உயிரிழப்பு

தாம்பரம்: கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (40). இவரது மனைவி குணசுந்தரி (32). இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை மின்ட் பகுதியில் இருந்து கடலூர் செல்வதற்காக மதுரவாயல் – தாம்பரம் பைபாஸ் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். தாம்பரம், இரும்புலியூர் மேம்பாலத்தில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோர தடுப்புச் சுவர் மீது பயங்கரமாக மோதியது. இதில், கணவன், மனைவி இருவரும் கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் அவரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விஜயகுமாரின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாலை தடுப்பில் பைக் மோதி மனைவி கண் முன் கணவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Vijayakumar ,Cuddalore district ,Gunasundari ,Maduravayal-Thambaram ,Mint ,Cuddalore ,Thambaram ,Iruvanliyur ,
× RELATED தாம்பரம் மாநகராட்சியில் 102 சாலைப்பணிகள் நிறைவு