×

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவ ட்ட கலெக்டர் அலுவலகத்தில், கடந்த 10ம் தேதி குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், நாடாளுமன்ற, சட்டமன்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

இந்த கூட்டத்தில், கலந்துக்கொண்ட அலமேலு என்பவர், செய்தி மக்கள் தொடர்பு பிரிவில் பணியாற்றும் அரசு ஊழியர் சரஸ்வதி (37) என்பவரை பணி செய்ய விடாமல் தடுத்து பிரச்னை செய்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி செங்கல்பட்டு தாலுக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர், மாவட்ட கலெக்டர் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துத்கொண்ட கூட்டத்தில் அலமேலு என்ற பெண் பணி செய்ய விடாமல் பிரச்னை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Chengalpattu district ,Chengalpattu District Collector ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...