தடுப்பூசி கொள்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: தடுப்பூசி கொள்கை குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்கு காரணம் மத்திய அரசின் தவறான கொள்கையே என குற்றம்சாட்டப்படுகிறது. உள்நாட்டு மக்களுக்கே இல்லாத நிலையில், 95 நாடுகளுக்கு சுமார் 6 கோடி தடுப்பூசிகளை  பிரதமர் மோடி ஏற்றுமதி செய்தார். இது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராஜிவ் சுக்லா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:கொரோனா வைரஸ் கிராமங்களிலும் வேகமாக பரவுவது வேதனை அளிக்கிறது. எனவே பிரதமர் மோடி மாநில அரசுகளுடன் இணைந்து கிராமப்புறங்களில் மருத்துவ வசதிகளை மேற்படுத்த வேண்டும், அங்கு அதிகப்படியான மக்களுக்கு  தடுப்பூசி போட வேண்டும். இதுவரை மத்திய அரசு எவ்வளவு தடுப்பூசியை கொள்முதல் செய்தது, அதை எவ்வளவு இந்தியர்களுக்கு வழங்கியது என்பதை குறித்து அனைவரும் அறிந்து கொள்ள வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.வெளிநாடுகளுக்கு தடுப்பூசி தந்து இமேஜை உயர்த்திக் கொள்கிற நேரமல்ல இது. உங்கள் இமேஜை மறந்து மக்களின் உயிரை காப்பாற்ற முயற்சியுங்கள். அனைவருடனும் ஒன்றுபடுங்கள். கொரோனா பரவல் சங்கிலி துண்டிக்கப்படாவிட்டால்,  3வது அலை ஏற்படுவது நிச்சயம். எனவே பிரதமர் மோடி போர்க்கால அடிப்படையில்  தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, வெளிச்சந்தையிலும் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.116 மாஜி ஐஏஎஸ்கள் கடிதம்இதற்கிடையே முன்னாள் அமைச் சரவை செயலாளர் சந்திரசேகர், முன்னாள் சுகாதார செயலாளர் சுஜிதா ராவ் உள்ளிட்ட 116 ஓய்வு பெற்ற ஐஏஎஸ்கள் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள திறந்த மடலில், ‘‘இந்தியர்கள் அனைவருக்கும் இலவசமாக  தடுப்பூசி வழங்கப்பட வேண்டும். கிராமங்களிலும், நகர்ப்புறங்களிலும் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட வேண்டும். கொரோனா மிக முக்கிய பிரச்னை என்பதால் இதை முழு திறனுடன் அரசு கையாள வேண்டும்’’ என கூறி உள்ளனர்….

The post தடுப்பூசி கொள்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: