தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு மினி மாரத்தான் டிஐஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார் வேலூரில் 2ம் நிலை பெண் காவலர்கள் பங்கேற்ற

வேலூர்: வேலூரில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2ம் நிலை பெண் காவலர்களுக்கான மினி மாரத்தான் போட்டியை டிஐஜி முத்துசாமி தொடங்கி வைத்தார்.
வேலூர் கோட்டை காவலர் பயிற்சி பள்ளியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 2ம் நிலை பெண் காவலர்களுக்கு கடந்த ஜூன் 1ம் ேததி முதல் 7 மாத அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தினமும் காலை, மாலை என இருவேளையும் கவாத்து பயிற்சி, துப்பாக்கி கையாளுதல், லத்தி பயன்படுத்தும் முறை, அணிவகுப்புகளில் பங்கேற்பது, பொதுமக்களிடம் நடந்துகொள்ளும் முறை, சட்ட விதிகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2ம் நிலை காவலர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் ஸ்லோகன் போட்டியில் முதல் 3 இடம் பிடித்த 2ம் நிலை காவலர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதைதொடர்ந்து, நேற்று காலை தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2ம் நிலை காவலர்களுக்கான மினி மாரத்தான் போட்டி நடந்தது. இதை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் ராதாகிருஷ்ணன், ஆய்வாளர்கள் கனிமொழி, விஜயலட்சுமி மற்றும் பலர் இதில் பங்கேற்றனர்.

The post தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு மினி மாரத்தான் டிஐஜி கொடியசைத்து தொடங்கி வைத்தார் வேலூரில் 2ம் நிலை பெண் காவலர்கள் பங்கேற்ற appeared first on Dinakaran.

Related Stories: