×

செல்போன் கடை உரிமையாளர் வேன் சக்கரத்தில் சிக்கி பலி

திருப்பூர், நவ.28: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாரப்பாளையம் அடுத்த பொன்னுச்சாமி நகரை சேர்ந்தவர் பாலாஜி (24). இவர், செல்போன் கடை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று இருசக்கர வாகனத்தில் கொங்கு மெயின் ரோட்டில் இருந்து பாரப்பாளையம் செல்வதற்கு டிஎம்எப் மருத்துவமனை அருகே உள்ள தரைப்பாலத்தில் சென்றார். அப்போது, பாலாஜி எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார். அந்த சமயம் வந்த ஈச்சர் வேன் சக்கரத்தில் சிக்கி பாலாஜி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post செல்போன் கடை உரிமையாளர் வேன் சக்கரத்தில் சிக்கி பலி appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Balaji ,Ponnuchami Nagar, ,Barappalayam, Oothukuli Road, Tirupur ,Kongu ,Barapalayam ,DMF Hospital ,
× RELATED திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!