சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் உள்ள குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சாம் வின்சென்ட் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் சாம் வின்சென்ட். இவரது வீடானது கீழ்ப்பாக்கம் காவலர் குடியிருப்பில் சி பிளாக்கில் உள்ளது. இதேபோல் இவருக்கு சொந்தமாக கொளத்தூரிலும் வீடு உள்ளது. கடந்த சில நாட்களாகவே சாம் வின்சென்ட் மீது அடுக்கடுக்கான லஞ்ச புகார்கள் எழுந்துள்ளது. ஏற்கனவே இவர் விபச்சார தடுப்பு பிரிவில் பணியாற்றிய போதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், லஞ்ச புகார் எதிரொலியாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 5 பேர் இன்று காலை 7 மணி முதல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள சாம் வின்சென்ட் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் கொளத்தூரில் உள்ள வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் முடிவில் சாம் வின்சென்ட் வீட்டில் எந்தெந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டது. வருமானத்திற்கு அதிகமாக ஏதேனும் சொத்து சேர்த்துள்ளாரா? வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை வரை சோதனை நீடிக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …
The post சென்னை கீழ்ப்பாக்கத்தில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை..!! appeared first on Dinakaran.