மீனம்பாக்கம்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் விமான நிலைய ஓடுபாதை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் சென்னைக்கு வரவேண்டிய விமானங்கள் பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன. நேற்று காலை முதல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் விமானங்கள் தரையிறங்க விமான நிலையம் ஆணையம் தடை விதித்தது. மாலையில் மழை நின்றதும் சென்னை விமான நிலையத்தில் மீண்டும் உள்நாட்டு விமான சேவைகள் துவங்கின. டெல்லியில் இருந்து 85 பயணிகளுடன் நேற்று மாலை 6.20 மணிக்கு ஒரு விமானம் சென்னை வந்தது. இதைத் தொடர்ந்து வரிசையாக பல்வேறு பகுதிகளில் இருந்து விமானங்கள் இயங்க துவங்கின. இதைத் தொடர்ந்து புனே, மும்பை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களிலிருந்து சென்னைக்கு உள்நாட்டு விமானங்கள் வந்து சேர்ந்தன. அதேபோல் சென்னையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 14 விமானங்கள் மீண்டும் நேற்றிரவு சென்னைக்கு வந்து சேர்ந்தன. இதைத் தொடர்ந்து, நேற்றிரவு முதல் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் வருகை, புறப்பாடு வழக்கம் போல் இயங்கி வருகின்றன….
The post சென்னையில் உள்நாட்டு விமான சேவை மீண்டும் தொடங்கியது appeared first on Dinakaran.