சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா கவுதஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி, கோவிந்தப்பா. இவர் தனக்கு சொந்தமான பசுக்களை கிராமத்தின் அருகேவுள்ள தோட்டங்களில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இதே போல் சம்பவத்தன்று காலை வழக்கம் போல் பசுக்களை மேய்ச்சலுக்கு விட்டு இவர் வேறு பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில் தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட பசுக்கள் பயிர்களுக்கு போடும் ரசாயனம் கலந்த உரத்தின் தண்ணீரை குடித்து சம்பவ இடத்திலேயே இறந்தது. பரிசோதனையில் விஷம் கலந்த தண்ணீர் குடித்ததால் இறந்துள்ளது தெரிய வந்தது. இதற்கு விவசாயி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
உயிரிழந்த பசுக்களுக்கு நிவாரணம் கோரிக்கை
