சீனாவுக்கு போட்டியாக தைவான் போர் பயிற்சி: மேலும் பதற்றம் அதிகரிப்பு

பிங்டங்: சீனாவுக்கு போட்டியாக தைவானும் போர் பயிற்சியை தொடங்கி இருப்பதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. சீனா தனது நாட்டின் ஒருபகுதியாக சொந்தம் கொண்டாடும் தைவானுக்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் பயணம் மேற்கொண்டார். கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், பெலோசி தைவானுக்கு சென்றதால் ஆத்திரமடைந்த சீனா, தைவானை மிரட்டும் வகையில் 100 போர் விமானங்கள், போர் கப்பல்களுடன் தைவான் ஜலசந்தியில் போர் பயிற்சியை தொடங்கியது. தைவான் வான்வெளியிலும் சீன விமானங்கள் பறந்து பயிற்சி மேற்கொண்டதால் போர் பதற்றம் நிலவுகிறது. 4 நாள் நடப்பதாக கூறிய சீன போர் பயிற்சி 6வது நாளாக நேற்றும் தொடர்கிறது. இந்நிலையில், சீனாவுக்கு போட்டியாக தைவானும் நேற்று போர் பயிற்சியை தொடங்கியது. தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பிங்டங் மாவட்ட பகுதியில் உண்மையான வெடிகுண்டுகளை பயன்படுத்தி தைவான் ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இது, தனது சொந்த நாட்டை காப்பாற்றிக் கொள்வதற்காக நடக்கும் பயிற்சி என கூறி உள்ள தைவான் ராணுவம், தனது எல்லையில் ஊடுருவவோ, நிலையை மாற்றவோ சீனாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், சீனா-தைவான் இடையேயான போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது….

The post சீனாவுக்கு போட்டியாக தைவான் போர் பயிற்சி: மேலும் பதற்றம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: