×

சீதாராமாஞ்சநேய கோயிலில் உற்சவம்

ஓசூர், ஆக.9: ஓசூர் அருகே பாத்தகோட்டா கிராமத்தில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீதாராமாஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக, திருஞ்சனம் மற்றும் திருவீதி உற்சவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு, கோயிலில் சீதாராமாஞ்சநேய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், திருமஞ்சனம் திருவீதி உற்சவம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து சரஸ்வதி பாலம் கருடா சேவா நடந்தது. மாணவர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

The post சீதாராமாஞ்சநேய கோயிலில் உற்சவம் appeared first on Dinakaran.

Tags : Sitaramanjanaya Temple ,Sitaramanjaneya Swami ,Pathakota ,Ozur ,Thirunjanam ,Thiruviti festivities ,Sitaramanjaneya Temple ,
× RELATED ஏரிக்கரையில் பனை விதை நட்ட கல்லூரி மாணவிகள்