×

சிறுமியை கடத்திய ஆட்டோ டிரைவர்

கிருஷ்ணகிரி, செப்.20: பர்கூர் ஏ.நாகமங்கலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்து விட்டு, வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 16ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி திடீரென மாயமானார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி சிறுமியின் பெற்றோர், பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், அதே பகுதியில் உள்ள நாகமங்கலத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாது (24) என்பவர், மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது என தெரிவித்திருந்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post சிறுமியை கடத்திய ஆட்டோ டிரைவர் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Barkur A. ,Nagamangalam ,
× RELATED ஒசூர் அருகே டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தீ விபத்து