×

சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம்

மோகனூர், நவ.12: மோகனூர் ஒன்றியம், ராசிபாளையம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமில் மண்டல இணை இயக்குனர் மாரியப்பன், உதவி இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தரமான தீவனம் அளிப்பது குறித்தும், நோய் தாக்குதலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்தும் விளக்கி கூறினர். மேலும், கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம் செய்யப்பட்டது. தீவன மேலாண்மை, தடுப்பூசி முக்கியத்துவம் குறித்து விளக்கி கூறப்பட்டது. ஏற்பாடுகளை ஒன்றிய கால்நடை உதவி மருத்துவர்கள் காளிமுத்து, கலைமணி, பிரபாவதி மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் பரமேஸ்வரி, புனிதா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

The post சிறப்பு கால்நடை சிகிச்சை முகாம் appeared first on Dinakaran.

Tags : Special Veterinary ,Treatment ,Camp ,Moganur ,Animal Husbandry Department ,Rasipalayam Village ,Union ,Regional ,Mariyappan ,Assistant Director ,Vijayakumar ,Special ,Veterinary Treatment Camp ,Dinakaran ,
× RELATED சிறுவாச்சூர் தனலட்சுமி சீனிவாசன்...